பானிபூரி விற்ற சிறுவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்கியது ஐபிஎல்!!
பானிபூரி விற்ற ஒரு சிறுவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்கியது ஐபிஎல்!!

17 வயதான யாஸ்மின் ஜயேசுவாலை ஐபிஎல் ஏலத்தில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.ஜூனியர் லெவல் இன் இந்திய அணிக்காக விளையாடிய போது பழைய பலரது கவனத்தை ஈர்த்தவர் இவர்.அண்மையில் ஜார்கண்ட் எதிராக உள்ளூர் போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தால் இதில் 12 சிக்ஸர் மற்றும் 17 பௌண்டரிகள் அடங்கும்.இதனை அடுத்து மிக இளம் வயதில் 200 எடுத்து சாதனை படைத்தார் இவர் அதனால் என்னமோ இவர் ஐபிஎல் ஏலத்தில் அதிக கோடிகளில் வாரினார் என்று சொல்லலாம்.சாதனையாளராக உருவெடுத்து இவரது சிறுவயது பருவம் லட்சியத்திற்காக முயற்சி செய்வோருக்கு ஒரு சிறந்த பாடமாக திகழ்கிறார்.

உத்திரபிரதேசத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜெய்ஸ்வால் சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் அசாத்திய திறமை கொண்டவராக இருந்திருக்கிறார்.ஜெய்ஸ்வாலின் திறமையை அறிந்த அவரது நலம் விரும்பிகள் அவரது ஏழ்மை அவரை அழித்து விடக்கூடாது என்பதற்காக மும்பைக்கு அனுப்பி வைத்தனர். மும்பைக்கு சென்று ஒரு ஹோட்டலில் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார் அவர்.பாதி நேரம் வேலை பாதி நேரம் கிரிக்கெட் என்று ஜெய்ஸ்வால் இருந்தார், அதனை அறிந்த ஹோட்டலில் முதலாளி சரிவர வேலை செய்யாத காரணத்தால் அவரை விரட்டினார்.
இதன் மனம் தளராத ஜெய்ஸ்வால் ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து அங்கு உள்ள தோட்ட பணியாளருக்கு சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.கழிவறைக்கு கூட வழியில்லாமல் சிறிய டிரெண்டில் வாழ்ந்து வந்த இவர் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் நரக வேதனையில் இருந்து வந்தார். இந்த சமயத்தில் தான் தன் தந்தை அனுப்பும் பணம் போதாது என்று மைதானத்தில் பானிபூரி விற்று வந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.

பானிபூரி பெற்று வந்தாலும் பல இரவுகள் பட்டினியோடு இருந்திருக்கிறார் மற்றும் பல கஷ்டங்களை அனுபவித்து இவர் இப்போது ஐபிஎல் களம் இறங்கப் போகிறார்.எத்தனையோ இளைஞர்கள் போலதான் ஜெய்ஸ்வாலும் ஊரைவிட்டு நகரத்துக்கு வந்து கஷ்டப்பட்டிருக்கிறார். ஆனால் தனது லட்சியத்தில் கொண்ட வெறியும் கிரிக்கெட்டில் கொண்ட பற்றும் தான் அவரை ஐபில் வரையும் கொண்டு வந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *