4 செம்மையான Android Apps | 4 best Apps in 2019

இந்தப் பதிவில் நாம் நான்கு முக்கியமான மற்றும் பயனுள்ள Android Apps பற்றி தான் பார்க்கப் போகிறோம்.இந்த Apps அனைத்தும் உங்களுடைய வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் ஆதலால் இந்த பதிவை பார்த்து பயனடைந்து கொள்ளுங்கள்.இந்தப் பதிவில் விமர்சிக்கப்படும் ஆப் உடைய டவுன்லோட் லிங்க்  அந்தந்த ஆப் பதிவின் கடைசியில் வழங்கப்பட்டிருக்கும் கிளிக் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.1.EASY SELFIE

இந்த ஆப்பை பயன்படுத்தி நாம் கை தட்டுவதன் மூலமாக செல்பி எடுத்துக் கொள்ளலாம்.நீங்கள் எங்கேயாவது வெளியூருக்கு சுற்றுலா சென்றிருந்தால் யாரும் இல்லாத இடத்தில் போட்டோஸ் எடுப்பதற்கு இந்த Appபை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த ஆப்பை ஓபன் செய்த பின்பு அதில் Sound Trigger என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் இப்பொழுது நீங்கள் எங்கே செல்பி எடுக்க போகிறீர்களோ அங்கே நீங்கள் நின்றுகொண்டு உங்கள் மொபைலை தூரமாக உங்களுக்கு முன்னால் நிறுத்தி வைத்து நீங்கள் கை தட்டினால் போதும் உங்களுடைய மொபைலில் இருந்து ஆட்டோமேட்டிக்காக SELFIE எடுத்து விடும்.இந்த Appல் கை தட்டுவதன் Soundடை கூட்டியும் குறைத்தும் நாம் வைத்துக் கொள்ளலாம்.அதேபோல் இந்த Appல் Countdown Set செய்து கை தட்டாமலும் நாம் போட்டோஸ் எடுத்துக்கொள்ளலாம்.இந்த APP செல்பி காதலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Install செய்து பயன்படுத்தி பாருங்கள்.
Download

2.LOCK MY COMPUTER

இந்த ஆப்பை பயன்படுத்தி உங்களுடைய மொபைலில் இருந்து உங்கள் கணினியை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.இந்த Appல் சென்டரில் உள்ள Lock பட்டனை கிளிக் செய்தால் போதும் ஆட்டோமேட்டிக்காக உங்களுடைய கம்ப்யூட்டர் Lock ஆகிவிடும்.இந்த ஆப்பை முதலில் உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் பின்பு அதே போல் கணினிக்கு ஒரு சாஃப்ட்வேர் தேவை அதனுடைய Size மிகக்குறைவுதான் அதை நீங்கள் உங்களுடைய கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.கணினிக்கு தேவையான சாப்ட்வேரும் மொபைல் உடைய Appம் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.முதலில் கணினியில் இன்ஸ்டால் செய்த சாஃப்ட்வேரை ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் Start Service என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.இப்போது உங்களுடைய மொபைலில் Settings ஆப்ஷனை கிளிக் செய்து Hotspotடை Enable செய்து கொள்ளுங்கள் பின்பு கணினி Wifiயுடன் உங்களுடைய ஹாட்ஸ்பாட் இணைத்துக் கொள்ளுங்கள் இதற்கு எந்த ஒரு இன்டர்நெட்டும் தேவை இல்லை.இப்பொழுது அந்த Appல் மேலே மூன்று புள்ளி கொடுக்கப்பட்டு இருக்கும் அதை கிளிக் செய்கிறீர்கள் என்றால் அதில் Settings என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் அது உங்களுக்கு 2 option காட்டும் ஒன்று Host Address மற்றொன்று Port.Host Address என்பது நம்முடைய கணினி உடைய IP address.அந்த Host Address என்ற இடத்தில் நம்முடைய கண்ணுடைய IP Addressஐ டைப் செய்ய வேண்டும் உங்களுக்கு கணினி உடைய Ip address தெரியவில்லை என்றால் உங்கள் கணினியில் Control Panel சென்று Network and Sharing Center  என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் அப்போது நீங்கள் Connect செய்து வைத்துள்ள அந்த Wifi உடைய Network இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் ஒரு Page ஓபன் ஆகும் அதில் Details என்ற ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் மற்றொரு Page ஓபன் ஆகும் அதில் IPV4 Address என்ற இடத்திற்கு நேராக உள்ள நம்பர் தான் நம்முடைய கணினி உடைய IP Address.அந்த IP address ஐ இந்த Appல் Host Address என்ற இடத்தில் Type செய்து கொள்ளுங்கள்.அதேபோல் Port என்ற ஆப்ஷனில் நாம் இன்ஸ்டால் செய்த லாக் மை கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன் கீழே Port நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும் அதை இந்த Appல் Port என்ற இடத்தில் டைப் செய்து கொள்ளுங்கள்,இப்போது கீழே Save என்ற ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷனை கிளிக் செய்து Save செய்து கொள்ளுங்கள்.அவ்வளவுதான் இனி Lock பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய கணினி Lock ஆகிவிடும்.இந்தப் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.App Download

Software Download

3.SPEEDOMETER

இந்த ஆப்பை நாம் Bike உடைய Speed மீட்டராக பயன்படுத்தலாம்.உங்களுடைய பைக்கில் ஸ்பீடோமீட்டர் உடைந்து விட்டாலோ அல்லது உங்கள் சைக்கிளுக்கு ஸ்பீடோமீட்டர் வேண்டுமென்றாலும் அல்லது நீங்கள் இரயிலில் பயணம் செய்யும் போது எவ்வளவு ஸ்பீடு போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது ஏரோபிளேன் எவ்வளவு ஸ்பீடு போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ இந்த ஆப்பை பயன்படுத்தி ஸ்பீடை நாம் அறிந்து கொள்ளலாம்.இந்த மிகவும் துள்ளியமாக நாம் போகக்கூடிய தொலைவை கணக்கிடுகிறது.இந்த Appபில் நாம் Speed(km/hr) உடைய நம்பரை அதிகமாகி கொண்டும் வைத்துக் கொள்ளலாம்.இந்த APP உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இந்த Appபை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.
Download

4.SAFE HEADPHONES

பொதுவாக நாம் ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது யாராவது நம்மிடம் பேசினால் நமக்கு காதுகளில் கேட்பதில்லை. ஆனால் இந்த ஆப்பை பயன்படுத்தி நாம் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போதும் கூட  யாராவது பேசினாலும் நம்மளை அழைத்தாலும் நம்முடைய ஹெட்போனில் அந்த  சவுண்ட் கேட்டு விடும்.வீட்டில் நாம் தனியாக இருக்கும் பொழுது நம்முடைய அன்னை நம்மளை அழைத்தாலும் கூட பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த சவுண்ட் நம்முடைய செல்போனில் கேட்டுவிடும் அதன் மூலம் நாம் அவர்களுக்கு Reply செய்து கொள்ளலாம்.இந்த App ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த ஆப்பை பயன்படுத்தி பாருங்கள்.
Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *