ஆதார் கார்டை Onlineனில் Download செய்வது எப்படி?Using Mobile-How to download Aadhaar Card Form Online

இந்தப் பதிவில் நாம் ஆன்லைனில் மொபைல் மூலமாக Aadhaar Card Download செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம்.தம்மிடம் உள்ள ஆதார் கார்டு தொலைந்து விட்டாலோ(or) புதிதாக புதுப்பிக்க வேண்டும் என்றாலோ இந்த முறையை பயன்படுத்தி நாம் அதை செய்து கொள்ளலாம்.இந்தப் பதிவில் OTP என்று வரும் சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் உங்களுடைய மொபைலுக்கு ஆறு இலக்க எண் கொண்ட Message வரும் என்பதுதான் அதனுடைய அர்த்தம். தேவையானவை

 1. முதலில் தொலைந்துபோன உங்களுடைய ஆதார் கார்டு நம்பர் உங்கள் இடத்தில் இருக்க வேண்டும்.
 2. ஆதார் கார்டில் இருக்கும் Name மற்றும் Date of birth உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
 3. முதன்முதலில் ஆதார் பதிவு செய்யும் பொழுது கொடுத்த  மொபைல் நம்பர் உடைய மொபைல் உங்கள் இடத்தில் இருக்க வேண்டும் ஏனென்றால் அந்த மொபைலுக்கு ஒரு OTPவரும் அதற்காகத்தான். எப்படி AADHAAR CARD DOWNLOAD செய்வது என்று பார்ப்போம்?

 1. முதலில் இந்தப் பதிவின் கடைசியில் உள்ள ஆதார் app என்ற App ஐ உங்கள் மொபைலில் Download செய்து Install செய்து கொள்ளுங்கள்.
 2. இப்பொழுது அந்த ஆப்பை Registration செய்துகொள்ளவேண்டும் உங்கள் இடத்தில் இப்போது உள்ள உங்கள் மொபைல் நம்பரை கொடுத்து OTP பெற்று Registration செய்து கொள்ளுங்கள்.இந்த முறைக்கு உங்களுடைய ஆதார் பதிவு செய்த மொபைல் எண் தேவை இல்லை.
 3. இப்பொழுது அந்த Appபில் நிறைய Options காட்டும்.
 4. அதில் Aadhaar Download என்ற Optionனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 5. அதன்பின்பு அந்த Optionனில் உங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான இடம் கொடுக்கப் பட்டிருக்கும் அதில் உங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்.
 6. உங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்த பின்பு கீழே Capcha என்ற ஒரு ஆப்ஷனில் அவர்கள் அந்த Displayயில் காண்பிக்கும் நம்பரை அப்படியே டைப் செய்து வையுங்கள்.
 7. ஆதார் எண் பதிவு,Capcha கொடுத்த பின்பு கீழேயே GET OTP என்ற Option இருக்கும் அந்த Optionனை Click செய்யுங்கள்.
 8. இப்பொழுது உங்களுடைய ஆதார் பதிவு செய்த அந்த நம்பருக்கு ஒரு OTP வரும் அதாவது Normalலாக உங்களிடத்தில் உள்ள நம்பரில் இல்லை உங்களுடைய ஆதார் எந்த நம்பர் கொடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நம்பருக்கு ஒரு OTP வரும்.
 9. இப்பொழுது உங்களுடைய மொபைலில் நீங்கள் வேறு ஒரு பக்கத்தில் இருப்பீர்கள் அங்கு உங்களுடைய OTP ஐ பதிவு செய்வதற்கான இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அங்கே உங்களுடைய OTPனை பதிவு செய்யுங்கள்.
 10. OTPனை பதிவு செய்த பின்பு SUBMIT என்ற Optionனை Click செய்யுங்கள் இப்பொழுது உங்களுடைய OTP verify செய்யப்பட்டு உங்களுடைய Aadhaar Card உங்கள் மொபைலில் PDF வடிவில் Download செய்யப்படும்.
 11. அந்த ஆதார் PDF ஐ Open செய்யும் போது Password கேட்கும் அந்த Password என்னவென்றால் உங்கள் ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயரில் உள்ள முதல் நான்கு எழுத்து அதேபோல் உங்களுடைய Date of birthதிலுள்ள  வருடத்தின் நான்கு எழுத்தையும் நீங்கள் பதிவு செய்தல் வேண்டும்.அதாவது உங்களுடைய பெயர் அருண்குமார் என்றால் முதலில் உள்ள நான்கு எழுத்து CAPITAL LETTERரில் ARUN என்றும் அவருடைய Date of birth 1999 என்றால் 1999 என்றும் “ARUN1999” என்று Passwordடை நீங்கள் போட வேண்டும்.
 12. இப்பொழுது உங்களுடைய Aadhaar Card Open ஆகி PDF வடிவில் இருக்கும் அதை நீங்கள் கடையில் கொடுத்து Print Out எடுத்து கொள்ளலாம்.
 13. அவ்வளவு தான் உங்களுடைய Aadhaar Card ஐ உங்கள் மொபைலில் ஒரே நிமிடத்தில் Download செய்து விட்டோம்.Download

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் மறக்காமல் Whats app மற்றும் Facebookகில் SHARE செய்யுங்கள் ஏதேனும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் கீழே Commentடில் குறிப்பிடுங்கள் மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

2 Comments

 1. இது எனக்கு பயனுள்ளதாக இருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *